மத்திய அரசை போல் தமிழகத்திலும் தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்வு அளிக்க கோரிக்கை
நாமக்கல்: 'மத்திய அரசை போல், தமிழக அரசு ஆசிரியர்களுக்கு, தீபாவ-ளிக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்தி, 58 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், மத்திய அரசில் பணியாற்றும், 49 லட்சம் அரசு ஊழியர்கள், 69 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர். மத்திய அரசு, இந்த படிகளை ஆண்டுக்கு இருமுறை, அதாவது, ஜன., மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கிறது. இதற்கு முன், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை, இரண்டு சத-வீதம் உயர்த்தியது. இந்த உயர்வு, கடந்த, ஜன., 1 முதல் அம-லுக்கு வந்தது. இந்த உயர்விற்கு பின், அடிப்படை சம்பளத்தில், 53 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக அதிகரித்தது.மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, கடந்த ஜூலை முதல் உயர்த்தி வழங்கி உள்ள நிலையில், தமிழக அரசும், கடந்த ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்கி, தற்போது வரை உள்ள அகவிலைப்படி நிலுவை தொகையையும் சேர்த்து, நடப்பு வாரத்தில், தீபாவளிக்கு முன், அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.