பயன்பாடின்றி அரசு பள்ளி கட்டடம் இடித்து விட்டு புதிதாக கட்ட கோரிக்கை
ஓசூர்,கிருஷ்ணகிரி மாவட் டம், பாகலுார் அருகே சூடாபுரத்திலுள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 128 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு சொந்தமான பழைய ஓட்டு கட்டடம், அப்பகுதியில் பயன்பாடு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்துடன் கிருஷ்ணகிரி இருந்தபோது, 1976 ஜூன், 4ல் அப்போதைய கலெக்டர் வெங்கடகிருஷ்ணன் என்பவர் மூலமாக, இப்பள்ளி கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 49 ஆண்டு கடந்த நிலையில், இக்கட்டடம், தற்போது பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது.இதை இடித்து விட்டு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்டி கொடுக்க, கடந்த வாரம் ஓசூர் வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. எனவே, கல்வித்துறையினர் உடனடியாக கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட, கோரிக்கை எழுந்துள்ளது.