உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாசாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாசாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாமகிரிப்பேட்டை,:நாமகிரிப்பேட்டை அடுத்த, ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில், பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இரண்டாவது வாரம், தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை விழா, மூன்று மாதங்களுக்கு முன்பு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. தினமும் பெண்கள், மாரியம்மன் கோவிலுக்கு முன்புள்ள கம்பத்திற்கு, தண்ணீர் ஊற்றி வணங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தேருக்கு கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள், ஊர் பெரியத்தனக்காரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று பூ ஓடு எடுக்கும் நிகழ்ச்சி, சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. பூசாரி ராஜா, நேற்று காலை தீ சட்டியை கையில் ஏந்தி கோவிலை சுற்றி வந்தார். பின்னர் சாட்டையால் பக்தர்களை அடித்து ஆசி வழங்கினார். மேலும் பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பூசாரியிடம் சாட்டையடி வாங்கி சென்றனர். இன்று காலை தீ மிதி விழா, மாலை தேர்த்திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை