ரயிலை கடத்துவதாக மிரட்டல் தர்மபுரி வாலிபர் கைது
சேலம் :சேலம் ரயிலை கடத்துவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை, ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு 10:43 மணிக்கு, மொரப்பூருக்கு செல்லும் ரயிலை கடத்தி செல்வதாக மொபைல் போன் மூலம் ஒருவர் பேசியுள்ளார். அந்த மொபைல் எண்ணை வைத்து விசாரித்ததில், சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ளதை கண்டறிந்து, உடனடியாக ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் காட்பாடி ஸ்டேஷனில் நின்றவுடன், மிரட்டல் விடுத்த தர்மபுரி, அம்மாசிகோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த காவேரி மகன் சபரீசன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர். மிரட்டலுக்கு பயன்படுத்திய மொபைல் போனை நேற்று காலை பறிமுதல் செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.