மேலும் செய்திகள்
விருது பெற்ற அலுவலர்கள்
27-Aug-2025
குமாரபாளையம் :குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல்படி, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு இணைந்து பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை குழு உதவி ஆய்வாளர் குல்தீப் யாதவ், தலைமை காவலர் ரஞ்சித்குமார், காவலர் இசக்கிமுத்து, பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு பேரிடர் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கினர். அதில், சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பது; ஆம்புலன்ஸ் வரவழைப்பது; லாவகமாக துாக்கி படுக்க வைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல்; ஆற்றில் வெள்ளம் வந்தால், சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. வணிகவியல் துறை தலைவர் ரகுபதி, தமிழ்த்துறை தலைவர் முரளிதரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ் குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
27-Aug-2025