உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கல்

பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கல்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், சில மாதங்களாக பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகரித்து காணப்பட்டது. இதனால் திறந்தவெளில் பிளாஸ்டிக் கவர் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. மேலும், சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கவர் போடுவதால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், பள்ளிப்பாளையம் நகராட்சி சார்பில், நேற்று கலைக்குழுவினர் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகராட்சி தலைவர் செல்வராஜ், மஞ்சள் பை வழங்கினார். மேலும், பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார். நகராட்சி கமிஷனர் தயாளன், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை