உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 22ல் தி.கோட்டில் மாவட்ட அளவில் செஸ் போட்டி: வீரர்களுக்கு அழைப்பு

22ல் தி.கோட்டில் மாவட்ட அளவில் செஸ் போட்டி: வீரர்களுக்கு அழைப்பு

22ல் தி.கோட்டில் மாவட்ட அளவில்செஸ் போட்டி: வீரர்களுக்கு அழைப்புநாமக்கல், டிச. 10-'திருச்செங்கோட்டில், வரும், 22ல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடக்கிறது' என, ஜே.பி.ஆனந்த் செஸ் அகாடமி செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:திருச்செங்கோடு ஜே.பி.ஆனந்த் செஸ் அகாடமி சார்பில், 3வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி, வரும், 22ல், திருச்செங்கோடு விரிக்ஸா குளோபல் பள்ளியில் நடக்கிறது. இப்போட்டியில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிக்கு முதன்மை நடுவராக நாமக்கல்லை சேர்ந்த பீடேசதுரங்க நடுவர் முத்துகுமாரசாமி பங்கேற்கிறார். போட்டிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.இறுதியில் பெரியவர் பிரிவில் வெற்றிபெறும் வீரருக்கு முதல் பரிசு, 1,500 ரூபாய், கோப்பை; இரண்டாம் பரிசு, 1,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 800 ரூபாய், நான்காம் பரிசு, 700 ரூபாய், ஐந்தாம் பரிசு, 600 ரூபாய் என மொத்தம், 15 ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.மேலும், 8, 9, 10, 11, 12, 13, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவில் வெற்றி பெறும் முதல், மூன்று வீரர்களுக்கு, தலா, மூன்று கோப்பைகள் வீதம், மொத்தம், 42 கோப்பைகளும், போட்டியில் கலந்து கொள்ளும், 7 வயதுக்குட்பட்ட அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். மேலும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும். இந்த தொடரின் மொத்த பரிசு தொகை, 35,000 ரூபாய். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். லீக் முறையில் ஆறு சுற்றுகளாக நடக்கிறது.போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், வரும், 20க்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 98658-83233 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ