திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திட்டப்பணிகளை மாவட்டகண்காணிப்பு அலுவலர் ஆய்வுபள்ளிப்பாளையம், நவ. 29-பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் நடந்து வரும் திட்டப்பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருமான ஆசியா மரியம், மாவட்ட கலெக்டர் உமா முன்னிலையில், நேற்று பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட, லட்சுமிபுரம் அங்கன்வாடி மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு, உணவு பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும், நாட்டாகவுண்டன் புதுாரில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஜீவா செட் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.