உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டத்தின் விஷன் 2030 புத்தகம் வெளியீடு

மாவட்டத்தின் விஷன் 2030 புத்தகம் வெளியீடு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த, 'விஷன் 2030' புத்தகத்தை, எம்.பி., ராஜேஸ்குமார் வெளியிட்டார்.சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், 'உங்கள் கனவை செல்லுங்க' திட்டத்தின் நிறைவாக, 'கனவுகள் மெய்ப்படும்' என்ற தலைப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதை தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்-சிக்கு, கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கலந்துகொண்டு, நாமக்கல் மாவட்டத்தில், 1,400 மகளிர் திட்ட பணியாளர்கள் மூலம், 4.90 லட்சம் குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட தகவலின் அடிப்ப-டையில் தயாரிக்கப்பட்ட, 'கனவுகள் மெய்ப்படும்' திட்டத்தின் கீழ், 'மாவட்ட விஷன் 2030' என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழக முதல்வர் தலைமையிலான அரசின், ஐந்-தாண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தை, 2030-ம் ஆண்டுக்குள் வளமான, புத்தி-சாலித்தனமான, இளைஞர்களின் கனவுகளை உள்ளடக்கி, மிகுந்த திறன் வாய்ந்த மாவட்டமாக, நிலைத்த வளர்ச்சியுடைய மாவட்டமாக மாற்றும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட, முழு-மையான வளர்ச்சி திட்டமாக, 'நாமக்கல் விஷன் 2030' உருவாக்-கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆர்.டி.ஓ.,க்கள் சரவணன், கண்ணன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ