உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோடு அரசு மருத்துவமனைகட்டுமானம்: எம்.எல்.ஏ., ஆய்வு

தி.கோடு அரசு மருத்துவமனைகட்டுமானம்: எம்.எல்.ஏ., ஆய்வு

திருச்செங்கோடு, டிச. 18-திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, 23.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 60,000 சதுரடி பரப்பளவில், நான்கு தளங்களை கொண்ட அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று முன்தினம், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளில் பல்வேறு குறைகள் இருப்பதை கண்டுபிடித்து, அதிகாரிகளையும் ஒப்பந்ததாரர்களிடமும் சுட்டிக்காட்டி சரிசெய்ய கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை