உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., செயற்குழு கூட்டம்

தி.மு.க., செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பேசுகையில், ''தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு கிளையிலும் இளைஞரணி துவக்க நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரணிக்கு உறுப்பினர் சேர்க்கை விரைவில் நடத்த வேண்டும். பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், நீர்மோர் பந்தல்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,'' என்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், பொதுக்குழு உறுப்பினர் ரங்கசாமி, இந்திராணி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை