மேலும் செய்திகள்
அன்பழகன் பிறந்த நாள் விழா
20-Dec-2024
திருச்செங்கோடு, டிச. 20-திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட மேற்கு தி.மு.க., சார்பில் மறைந்த, தி.மு.க., பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்பழகனின், 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமையில், தி.மு.க.,வினர் அன்பழகன் உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு, நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்பாபு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
20-Dec-2024