உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டி.என்.பி.எஸ்.சி., தொழில் நுட்பப்பணி தேர்வு 762 பேர் பங்கேற்பு: 435 தேர்வர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., தொழில் நுட்பப்பணி தேர்வு 762 பேர் பங்கேற்பு: 435 தேர்வர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., தொழில் நுட்பப்பணி தேர்வு762 பேர் பங்கேற்பு: 435 தேர்வர் 'ஆப்சென்ட்'நாமக்கல், நவ. 10-நாமக்கல்லில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., தொழில் நுட்ப பணிக்கான போட்டித்தேர்வில், 762 பேர் பங்கேற்றனர். 435 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், 'டி.என்.பி.எஸ்.சி.,' நடத்தும், ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான போட்டித்தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் கோட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பி.ஜி.பி., இன்டர்நேஷனல் பள்ளி, பி.ஜி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய, நான்கு தேர்வு மையங்களில் நடந்தது. டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் சரவணக்குமார், நாமக்கல் கலெக்டர் உமா ஆகியோர், தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு, காலை, 9:30 மணிக்கு தொடங்கி, மதியம், 12:30 மணி வரை ஓ.எம்.ஆர்., விடைத்தாள் மூலம் நடந்தது. இதற்காக, 887 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 580 பேர் மட்டுமே பங்கேற்றனர். 307 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.அதேபோல், மதியம், 2:30 முதல், மாலை, 5:30 மணி வரை, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் மூலம் தேர்வு எழுதுவதற்காக, 310 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில், 182 பேர் எழுதினர். 128 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், மொத்தம், 1,197 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 762 பேர் பங்கேற்றனர். 435 தேர்வர்கள் பங்கேற்கவில்லை. தேர்வை கண்காணிக்க, 4 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு நடமாடும் குழு ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ