உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் டிரைவர் திடீர் சாவு

கொல்லிமலையில் டிரைவர் திடீர் சாவு

சேந்தமங்கலம், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை சேர்ந்தவர் கண்ணன், 55; கார் டிரைவர். இவர், நேற்று முன்தினம் தன் நண்பர்களுடன் கொல்லிமலை மாசி பெரியசாமி கோவிலுக்கு சென்றார். கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த கண்ணன், திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். அவரை, டோலி கட்டி செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வாழவந்திநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை