உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண்ணை தாக்கிய போதை ஆசாமி கைது

பெண்ணை தாக்கிய போதை ஆசாமி கைது

ப.வேலுார், ப.வேலுார் அருகே, கபிலர்மலை, ரங்கபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 60; விவசாயி இவரது மனைவி சரஸ்வதி, 55; இவர்களது பக்கத்தை வீட்டை சேர்ந்தவர் துரைசாமி, 43; விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, துரைசாமி குடிபோதையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பழனிச்சாமி, சரஸ்வதி தம்பதியரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கைகலப்பாக மாறி, துரைசாமி இரும்பு பைப்பால் சரஸ்வதியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சரஸ்வதி, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜேடர்பாளையம் போலீசார், துரைசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை