மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
20-Sep-2025
சேந்தமங்கலம்:கொல்லிமலையில் உள்ள செம்மேடு பஸ் ஸ்டாண்டில், போதைப்பொருட்களை ஒழிப்பது பற்றிய டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம், நேற்று முன்தினம் மாலை நடந்தது. ஊர்வலத்தை, முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதியில் இருந்து சோளக்காடு வழியாக, தெம்பளம் சென்று மீண்டும் செம்மேடு பகுதிக்கு வந்தடைந்தது.இதுகுறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் கூறுகையில், ''கொல்லிமலையில் உள்ள பழங்குடியினர் மக்கள் குடிப்பழக்கத்தால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அவற்றை தடுக்க இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. விழாவில், வாழவந்திநாடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார், அரியூர் நாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நாகலிங்கம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
20-Sep-2025