உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இ.கம்யூ., தெருமுனை பிரசாரம்

இ.கம்யூ., தெருமுனை பிரசாரம்

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அனந்தகவுண்டம்பாளையம் பஞ்., ஆலம்பாளையத்தில், இ.கம்யூ., கட்சி சார்பில், தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கிளை செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பழகன், ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவேல் பேசினார். கூட்டத்தில், நவ., 7ல் புரட்சி தின கொண்டாட்டம், கட்சியின் கொள்கை, வளர்ச்சி குறித்து மக்களிடையே தெரியப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் செங்கோட்டுவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செங்கோட்டையன், ராசிபுரம் நகர செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை