கல்லுாரி மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம்
ராசிபுரம்:ராசிபுரம் ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில், நேற்று கல்வி கடன் முகாம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி முகாமை பார்வையிட்டார்.முகாமில், கல்லுாரி மற்றும் மற்ற கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக்கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது. மேலும், கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், புதிதாக கல்விக்கடன் பெற வசதியகாக விண்ணப்பங்களை, 'வித்யாலட்சுமி' இணையத்தில் பதிவேற்றம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தது. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடியாக கல்வி கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டது.