மேலும் செய்திகள்
ஏரிச்சாலையில் வேலி அமைக்க வலியுறுத்தல்
03-Nov-2024
மல்லசமுத்திரம், நவ. 30-மல்லசமுத்திரம் யூனியன், நாகர்பாளையம் பஞ்.,க்குட்பட்ட, எருக்கலாங்காட்டுபுதுார், அரசு மாணவர் விடுதிக்கு அருகே அருந்ததியர் தெருவில் வசித்து வருபவர்கள் பெருமாள், 85, ராமாயி, 80, தம்பதியர். இவர்களது மகள் வழி பேரன் அருள், 25; மூளை வளர்ச்சி குன்றியவர். எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில், வேறொருவருக்கு வழங்கப்பட்ட அரசு தொகுப்பு வீட்டை விலைக்கு வாங்கி அதில் வசித்து வந்தனர்.தற்போது, குடியிருப்பு பழுதடைந்ததால், வீட்டை பழுது நீக்கம் செய்யவும், தரைத்தளம் அமைக்கவும், தமிழக அரசு சார்பில், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டத்தில், ஒரு லட்சத்து, 50,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 20 நாட்களுக்கு முன், இத்திட்டத்தில் பணிகள் தொடர, வீட்டின் மேற்கூரை கான்கிரீட் தளம் இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. மழை, பனிப்பொழிவு அதிகம் உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி பேரனுடன் முதிய தம்பதியர், அங்குள்ள ஆலமரத்தடியில் பிளாஸ்டிக் படுதாவில் குடிசை அமைத்து தங்கி சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, மல்லசமுத்திரம் பி.டி.ஓ., அருளப்பனிடம் கேட்டபோது, ''அதிகாரிகள் மூலம் கண்காணித்து விரைவில் அந்த வயதான தம்பதியருக்கு வீடுகட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
03-Nov-2024