தேர்தல் அங்கீகாரம்: த.வெ.க., கொண்டாட்டம்
ராசிபுரம்: தேர்தல் அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, த.வெ.க., நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள, த.வெ.க., கட்சியின் கொடியை, சில நாட்களுக்கு முன் சென்னை கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று, த.வெ.க.,வுக்கு தேர்தல் ஆணையம் அரசியல் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதேபோல், மாநாடு நடத்தவும் தமிழக காவல்துறை அனுமதியளித்துள்ளது. இதை த.வெ.க., நிர்வாகிகள் மாநிலம் முழுதும் கொண்டாடி வருகின்றனர். ராசிபுரம் சட்டசபை தொகுதி பகுதியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.