மின் பணியாளர்கள் நலச்சங்க கூட்டம்
'மின் பணியாளர்கள்நலச்சங்க கூட்டம்சேந்தமங்கலம், நவ. 21-சேந்தமங்கலத்தில், மின் பணியாளர்கள் நலச்சங்க நுகர்வோர் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகவேல் வரவேற்றார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சென்னை நுகர்வோர் நிர்வாகிகள் பூபதி, பாஸ்கரன், பரத் உள்ளிட்டோர், மின் நுகர்வோர் திறன் மேம்பாடு குறித்தும், மொபைல் போனில், 'டான்செட் கோ' என்ற செயலியை, 'டவுன்லோடு' செய்து அதன் மூலம் மின் பணியாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்துக்கொள்வது குறித்தும் விளக்கமளித்தனர். கவுரவ தலைவர் சச்சிதானந்தம், பொருளாளர் சுப்ரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.