உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு ஒத்த செருப்பை காணிக்கையாக வழங்கிய ஊழியர்

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு ஒத்த செருப்பை காணிக்கையாக வழங்கிய ஊழியர்

கரூர் கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு, காகித ஆலை முன்னாள் ஊழியர் ஒத்த செருப்பை காணிக்கையாக வழங்கினார்.கரூர் அருகே, தான்தோன்றிமலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, பக்தர்கள் மூன்றாவது சனிக்கிழமையின் போது, ஒத்த செருப்பை கோவிலுக்கு, காணிக்கையாக பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று, முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கோவிலில் சுவாமியை வழிபட்டனர். அப்போது, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மூலிமங்கலம் பகுதியை சேர்ந்த, டி.என்.பி.எல்., அரசு காகித ஆலை நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளி சண்முகம், 62, என்பவர் மூன்று அடி நீளம், ஒன்றரை அடி அகலம் கொண்ட தோலால் மற்றும் ரெக்ஸினால் உருவாக்கப்பட்ட ஒத்த செருப்பை, கோவிலில் காணிக்கையாக வழங்கி சுவாமியை வழிபட்டார். 'வேண்டுதல் நிறைவேறியதால், கடந்த மூன்று ஆண்டுகளாக, முதல் புரட்டாசி சனிக்கிழமையின் போது, வீட்டில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு, திண்டுக்கல் பக்தர்கள் மாதிரி நானும், ஒத்த செருப்பை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு வழங்கி வருவதாக' சண்முகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை