உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோடு தெப்பக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருச்செங்கோடு தெப்பக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி, திருச்செங்கோடு- ஈரோடு ரோடு, தெப்பக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மூன்று வீடுகள், ஒரு கடை ஆகியவற்றை அகற்றினர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஈரோடு ரோடு பகுதியில் உள்ள தெப்பக்குள கரைப்பகுதியில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், குடியிருந்தவர்களுக்கு மாற்றும் இடம் வழங்கப்பட்டது. குளக்கரையில் குடியிருந்த பலரும் அரசின் சார்பில் ஒதுக்கி கொடுத்த மாற்று இடத்திற்கு சென்று விட்டனர். இதில் சம்பூர்ணம் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சில பேர் மட்டும் இடத்தை காலி செய்யாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். வழக்கு விசாரணைக்குபின், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை நகராட்சி, போலீஸ், தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.குடியிருப்புவாசிகள், 'வீடுகளை அகற்றக் கூடாது' என, கூறி, ஈரோடு- திருச்செங்கோடு சாலையில், மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் அகற்றப்படுகிறது. திருச்செங்கோடு கோழிகால்நத்தம் ரோட்டில் உள்ள செங்கோடம்பாளையம் சின்ன ஆலமரம் பகுதியில் மாற்று இடம் கொடுத்தும், அந்தப் பகுதிக்கு செல்லாமல் நீங்கள் ஆக்கிரமிப்பு பகுதியிலேயே உள்ளீர்கள். மறியல் தொடர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள்' என கூறியதால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி