உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் சிக்கன வாரவிழா: விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கன வாரவிழா: விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், டிச. 22-நாமக்கல் கோட்டம் சார்பில், மின் சிக்கன வாரவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், மின் சிக்கனம், மின்விபத்து, மின் திருட்டு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் மின்சார விழிப்புணர்வு வார விழா கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு, கடந்த, 14 முதல், நேற்று வரை மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மின் பகிர்கான கழகம், நாமக்கல் கோட்டத்தின் சார்பில், மின் சிக்கன வாரவிழா நேற்று கொண்டாடப்பட்டது.நாமக்கல் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். நாமக்கல் - பரமத்தி சாலையில் துவங்கிய பேரணி, மணிக்கூண்டு, மோகனுார் சாலை சென்று முடிந்தது. உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தபாபு, பாஸ்கரன், மனோகரன், சவுந்திராபண்டியன், பிரேம்நாத், நாகராஜன், அலுவலர்கள், ஊழியர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை