உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய சிலம்பாட்டத்தில் வெற்றி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய சிலம்பாட்டத்தில் வெற்றி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ராசிபுரம், டில்லியில், கடந்த, 21, 22ல், தல்கதோரா உள்விளையாட்டு அரங்கத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே, தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, ஆறு வீரர்கள் விளையாடினர். இதில், மூன்று பேர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். மற்றவர்கள் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.போட்டியில், தொடும் முறை, ஒற்றை கம்பு சண்டை என பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு, நாமக்கல் மாணவ, மாணவியர், மூன்று தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், நேற்று ராசிபுரம் வந்தனர். அவர்களுக்கு, ஆண்டகளூர்கேட் பகுதியில் பெற்றோர், நண்பர்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர்.வெற்றி பெற்ற வீரர்கள் கூறுகையில், 'அரசு பள்ளிகளில், சிலம்பத்திற்கான பயிற்சியாளர்களை நியமித்து, மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். தற்போது, வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்து நடக்கும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ