மேலும் செய்திகள்
செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம்
26-Oct-2026
சேந்தமங்கலம்,:நாமக்கல், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்.,க்கு, கடந்த சில மாதங்களாக சேந்தமங்கலம் செயல் அலுவலர் பொறுப்பு அலுவலராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், நீலகிரி மாவட்டம், ஜகதலா பேரூராட்சியில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வந்த நடராஜன், தற்போது பதவி உயர்வு பெற்று காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி புதிய செயல் அலுவலராக நடராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.
26-Oct-2026