கிணற்றில் விழுந்த விவசாயி இறப்பு
ப.வேலுார், ப.வேலுார், பிராந்தகம் அருகே செக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி, 72, விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள், 60. நேற்று முன்தினம் அதே பகுதியில் கணவன், மனைவி இருவரும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். மாலையாகியும் கணவரை காணாததால் மனைவி செல்லம்மாள் மட்டும் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார். இரவு வரை கணவர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே சுப்பிரமணி செருப்பும், தண்ணீர் பாட்டிலும் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த செல்லம்மாள் நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடிய போது சுப்பிரமணி சடலமாக மீட்கப்பட்டார். வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.