உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டிராக்டர் மீது டூவீலர் மோதி விவசாயி பலி

டிராக்டர் மீது டூவீலர் மோதி விவசாயி பலி

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, நாரை கிணறு பிரிவு பாதை, காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மாதேஸ்-வரன், 55; விவசாயி. இவர், நேற்று முன்தினம், டூவீலரில் முள்-ளுகுறிச்சியிலிருந்து தன் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் மீதி மோதி-யதில், மாதேஸ்வரன் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரன் நேற்று பலியானார். ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி