உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏரி, குளம், குட்டை நிரம்பியதால் நாற்று நடவில் விவசாயிகள் தீவிரம்

ஏரி, குளம், குட்டை நிரம்பியதால் நாற்று நடவில் விவசாயிகள் தீவிரம்

நாமக்கல், தமிழகத்தில், கடந்த, அக்.,ல் பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்தது. அதன் காரணமாக, ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின. மேலும், விவசாய கிணறுகளில் நீர் இருப்பும் அதிகரித்ததுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து, விவசாயிகள் அந்தந்த பகுதிக்கு ஏற்ப சாகுபடி பயிர்களை நடவு செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மாதம் நாமக்கல், மோகனுார், ராசிபுரம், புதுச்சத்திரம், கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில், கனமழை பெய்தது. அதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், நாற்று நடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.இதுகுறித்து, மோகனுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஹேமலதா கூறியதாவது: மோகனுார் வட்டாரத்தில், பருவமழையை பயன்படுத்தி, சம்பா பருவத்தில், தற்போது, நடவு பணி தீவிரமடைந்துள்ளது. இங்கு, 250 முதல், 300 ஏக்கர் பரப்பளவில் ஆந்திரா பொன்னி, கோ-55 ரக நெல்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த பயிர்கள், 110 முதல், 120 நாட்களில் அறுவடை செய்யப்படும். மேலும், காரீப், ரபி பருவத்தை பின்பற்றி, 5,000 ஏக்கரில் சோளம், 750 ஏக்கரில் நிலக்கடலையும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இரவை பருவத்தில், 2,000 ஏக்கரில் சோளம், 1,500 ஏக்கரில் மக்காச்சோளம், மானாவாரி நிலத்தில், 1,250 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை