உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொடர் ஒயர் திருட்டு விவசாயிகள் கவலை

தொடர் ஒயர் திருட்டு விவசாயிகள் கவலை

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், முட்டாஞ்செட்டியில் பச்சையம்மாள் என்பவரது தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில், சில தினங்களுக்கு முன் மின் மோட்டார் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல், பண்ணைக்காரன்பட்டி செல்லும் சாலையில் உள்ள விவசாய தோட்டத்தில் இருந்த மின் ஒயர்களும், சுந்தரராஜன் என்பவரின் விவசாய தோட்டத்தில் இருந்த மின் ஒயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல், ஒரு வாரத்தில் மட்டும், 10க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் ஒயர்கள் திருடு போனதால், வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, ஒயர் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை