உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுாரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் கொண்டுவர விவசாயிகள் தீர்மானம்

ப.வேலுாரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் கொண்டுவர விவசாயிகள் தீர்மானம்

ப.வேலுார், பரமத்தி வேலுார் தமிழக வெற்றிலை விவசாயிகள் சங்கம் சார்பில், 48ம் ஆண்டு பேரவை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சங்க கவுரவ தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். நடப்பாண்டு வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவராக வையாபுரி, செயலாளராக நடேசன், பொருளாளராக ராசப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும், 50 பேர் கொண்ட பொதுக்குழுவிற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இக்கூட்டத்தில், ராஜா, பொய்யேரி, குமாரபாளையம் ஆகிய வாய்க்கால்களை முழுமையாக துார்வார வேண்டும். மேற்படி துார்வாரப்பட்ட மண்களை வாய்க்கால் மேட்டில் கொட்டி வைத்துள்ளதால், அப்பகுதியில் விவசாயத்துக்கு செல்லும் மக்கள் பாதையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்செய்து தர வேண்டும். மேலும், ப.வேலுார் அருகே பொத்தனுாரில் செயல்பட்டு வந்த வெற்றிலை ஆராய்ச்சி மையம் திருச்சிக்கு மாற்றப்பட்டது. விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் ப.வேலுாருக்கு வெற்றிலை ஆராய்ச்சி மையம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி