உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில் உள்ள மூலப்பள்ளிப்பட்டி கோரையாறு பகுதியில் ஓடை ஒன்று செல்கிறது. மழைக்காலத்தில், இப்பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் இருந்து ஓடை வழியாக மழைநீர் சென்று, கோரையாறுக்கு செல்லும். இந்த ஓடையை சுற்றி விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மரம் வைத்தும், வீடுகள் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், ஓடையில் இருந்து கோரயைாறுக்கு மழைநீர் செல்வது தடைப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுவில், 'கோரையாறு கரைப்பகுதியில் மரங்கள் வைத்தும், வீடுகள் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை அகற்ற வேண்டும். மாவட்ட சர்வேயர் மூலம் நிலங்களை அளந்து ஓடை நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ