உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்,:நாமக்கல்லில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.நாமக்கல் பி.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்துக்கு, ஆர்.டி.ஓ., சாந்தி தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற சொத்து மதிப்பு வழங்க வேண்டும். ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள், உரிய காலத்தில் நிலஅளவீடு செய்து தருவது இல்லை. எனவே, பயிர்கடன் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.தென்னையில் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதேபோல் பழைய மின் மோட்டார்களை மானிய விலையில், புதிய மின் மோட்டார்களாக மாற்றி கொள்ளும் திட்டத்தில் சொட்டுநீர் பாசனத்தை கடைபிடிக்கும் விவசாயிகள் மட்டுமே பயன்பெற முடியும் என நிபந்தனை உள்ளது. இதை தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில் உதவி வேளாண் அலுவலர் ஹேமா மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி