விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியனில் உள்ள ஏராளமான பஞ்.,ல் குடிநீர், கழிப்பிடம், சாக்கடை பணிகள் செய்யாமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக கூறி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், யூனியன் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு காலி கூடங்களுடன் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.