உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம்: உத்திரக்கிடி விவசாய தோட்டங்களில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை, வெறி நாய்கள் கடித்து உயிரிழப்பதை தடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், வி.ஏ.ஓ., அலுவலகம் முன், சேந்தமங்கலம் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விவசாய சங்க செயலாளர் சத்திவேல் தலைமை வகித்தார். தலைவர் கணபதி, பொருளாளர் நடராஜன், உதவி செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், துணை செயலாளர் ஜோதி ஆகியோர், 'உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வெறி நாய்களை கட்டுப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்' என கேட்டு கொண்டனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி