உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெல் வயலில் புகுந்த சாயக்கழிவு நீர் 10 ஏக்கர் பாதிப்பால் விவசாயி கவலை

நெல் வயலில் புகுந்த சாயக்கழிவு நீர் 10 ஏக்கர் பாதிப்பால் விவசாயி கவலை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் அடுத்த ஓடக்காடு பகு-தியை சேர்ந்தவர் சரவணன், 45; இவர், இரண்டு மாதங்களுக்கு முன், 12 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார்.அப்பகுதி வழியாக செல்லும் மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார். தற்போது, நெற்ப-யிர்கள் செழிப்பாக வளர்ந்து காணப்படுகிறது.இந்த விவசாய நிலத்தின் அருகிலேயே பல சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து வெளி-யேற்றப்படும் சாயக்கழிவு நீர், நேரடியாக வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ளது.அவ்வாறு திறந்த விடப்பட்டுள்ள சாயக்கழிவுநீர், பாசனத்திற்கு செல்லும் தண்ணீரில் கலந்து வயல்களில் புகுந்துள்ளது. இதனால் வயல் முழுவதும் சிவப்பு நிறத்தில் நுரையுடன் சாயக்கழிவுநீர் தேங்கி, நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, விவசாயி சரவணன் கூறியதாவது:நெல் சாகுபடி, 12 ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2 நாட்க-ளாக சாயக்கழிவுநீர் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது. இதனால், 10 ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.இன்னும் ஒரு மாதத்தில் நெற்பயிர் அறுவடைக்கு வந்து விடும். அதற்குள் சாயக்கழிவுநீர் கலந்ததால், நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு, 30,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அதிகாரிகள் ஆய்வுபள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் அடுத்த ஓடக்காடு பகு-தியில், நெல் வயலில் சாயக்கழிவுநீர் புகுந்து, 10 ஏக்கர் பாதிக்கப்-பட்டுள்ளது.மேலும், பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட இ.ஆர்., தியேட்டர் பகுதி, ராமசாமி தெரு, ஆர்.எஸ்., சாலை பகுதிகளில் சாயக்கழிவு நீரால், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குழாயில் இருந்து சிவப்பு, ரோஸ், ஆரஞ்சு நிறங்-களில் தண்ணீர் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிய-டைந்தனர்.இதுகுறித்து புகார்படி, நேற்று மாலை, 5:00 மணிக்கு குமாரபா-ளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்-பட்ட இடத்தை பார்வையிட்டு, சாய ஆலைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ