உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் கவலை

வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் கவலை

ப.வேலுார்: ப.வேலுார் அதன் சுற்றுவட்டாரங்களான, பரமத்தி, பொத்-தனுார், நன்செய் இடையாறு உள்ளிட்ட காவிரி கரையோர கிரா-மங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில், வாழை விவசாயம் மேற்-கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, பூவன், ரஸ்தாளி, கற்பூர-வல்லி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்-றன. அவ்வாறு பயிரிடப்படும் வாழை, ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து எடுத்துச்செல்வர். இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க-ளுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த வாரம், 600 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், தற்-போது, 500 ரூபாய்க்கும்; 450 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 400 ரூபாய்க்கும்; 450 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 350 ரூபாய்க்கும்; 10 ரூபாய்க்கு விற்ற ஒரு மொந்தன் காய், 7 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை