உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆசைக்கு இணங் க  மறுத்த மருமகளை கொன்ற மாமனார்

ஆசைக்கு இணங் க  மறுத்த மருமகளை கொன்ற மாமனார்

நாமகிரிப்பேட்டை: ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொலை செய்த மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், சின்ன அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி அருள்ஜோதி, 35. இரண்டாண்டுக்கு முன் மாரிமுத்து இறந்து விட்டார். இரு பெண் குழந்தைகளுடன் அருள்ஜோதி தனியாக வசித்தார். மாமனார் சேட்டு, 65, மருமகளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார்.இதனால் மகள்களுடன் சின்ன அரியாகவுண்டம்பட்டியில் அருள்ஜோதி தனியாக வசித்தார். சேட்டு நேற்று மதியம் அருள்ஜோதி வீட்டுக்கு சென்றுள்ளார். தனியாக இருந்த அருள்ஜோதியிடம், ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் அருள்ஜோதி வயிறு, மார்பில் சரமாரியாக குத்தி தப்பினார்.அருள்ஜோதி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார், தப்பிய சேட்டை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை