உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலையோரம் பாறாங்கல்லால் அச்சம்

சாலையோரம் பாறாங்கல்லால் அச்சம்

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் யூனியன் கட்டிபாளையத்தில், சோமணம்பட்டி - எலச்சிபாளையம் சாலையோரம், பல ஆண்டுகளாக பாறாங்கல் ஒன்று போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இவ்வழியாக, கல்குவாரிக்கு செல்லும் டிப்பர் லாரிகள், டூவீலர், கனரக வாகனங்கள் என, இரவு, பகல் பாராமல் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் பாறாங்கல் இருப்பதால், குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இரவில், இப்பகுதியில் போதிய வெளிச்சமில்லாமல் கும்மிருட்டாக உள்ளதால், பாறாங்கல் மீது வாகனம் மோதி அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே, சாலையோரம் உள்ள பாறாங்கல்லை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ