உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிதி நிறுவன அதிபர் வெட்டி படுகொலை

நிதி நிறுவன அதிபர் வெட்டி படுகொலை

மோகனுார்:பட்டப்பகலில் நிதி நிறுவன அதிபரை, கூலிப்படையினர் வெட்டி கொலை செய்தனர். நாமக்கல் -- மோகனுார் சாலையில் உள்ள ஈச்சவாரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ், 40. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இவர், சேலம் சாலையில், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று காலை, 11:10 மணிக்கு, நாமக்கல்லில் இருந்து, 'ஆக்டிவா' டூ - வீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த நான்கு பேர், அவரை வெட்டி தப்பினர். உயிருக்கு போராடிய அருள்தாஸ் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். மோகனுார் போலீசார் வாகனம் மற்றும் அதிலிருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரித்தனர். பணம், கொடுக்கல் வாங்கல் போன்ற காரணங்களால் அருள்தாஸ், கூலிப்படை யினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி