மேலும் செய்திகள்
தி.மு.க., பேனர் கிழிப்பு
28-Sep-2025
குமாரபாளையம்;குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 50; இவர் வீட்டிற்கு அருகே, கோன் நுாற்பாலை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், நுாற்பாலையில் பணிகளை முடித்துவிட்டு, இரவு, 9:00 மணிக்கு நுாற்பாலையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது நுாற்பாலையிலிருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நுாற்பாலையை வந்து பார்த்தபோது, தீ கொழுந்துவிட்டு எரிந்தது. குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, 4:00 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. மின்வாரிய பணியாளர்கள் வந்து, இணைப்புகளை சரி செய்து மின்சாரம் வழங்கினர்.
28-Sep-2025