உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு துறை விழிப்புணர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு துறை விழிப்புணர்வு

ராசிபுரம், ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில், தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 'வாங்க கற்றுக்கொள்வோம், பாதுகாப்புடன் உயிர்களை காப்போம்' என்ற தலைப்பில் தீயணைப்பு மீட்பு பணி துறையினர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இதில், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது, காஸ் தீவிபத்து, எலக்ட்ரிக்கல் தீ விபத்து, ஆயில் தீ விபத்து, வடகிழக்கு பருவமழை காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, அவசர காலங்களில் தீயணைப்பு துறையை எவ்வாறு உதவிக்கு அழைப்பது என்பது குறித்து பயிற்சியளித்தனர். நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையில் வீரர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு பாதுகாப்பு ஒத்திகைகளை செய்து காண்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ