5 ஏக்கர் கோரைப்புல்லில் தீ
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே மணப்பள்ளியை சேர்ந்தவர் அஜித்குமார், 45; விவசாயி. ஐந்து ஏக்கர் பரப்பளவில் கோரைப்புல் சாகுபடி செய்திருந்தார். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கோரையில், நேற்று முன்தினம் மாலை, தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது காற்றும் வீசியதால், தீ வேகமாக பரவியது. இதனால் ஐந்து ஏக்கர் முழுவதும் கோரைப்புல் எரிந்து நாசமானது. வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர், ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் எரிந்து சேதமான கோரைப்புல் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.