உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சவுக்கு தோட்டத்தில் தீ

சவுக்கு தோட்டத்தில் தீ

ப.வேலுார், ப.வேலுார் அருகே, ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மகாதேவன், 55; விவசாயி. இவரது தோட்டம், அருகில் உள்ள காமாட்சி நகரில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இவரது தோட்டத்தின் அருகே வரப்பில் இருந்த செடி, கொடிகளில் தீப்பற்றியது. காற்று வேகமாக வீசியதால், அருகில் இருந்த சவுக்கு தோப்பில் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதில், பத்துக்கு மேற்பட்ட சவுக்கு மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை