பி.ஜி.பி., கலை கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு துவக்க விழா
நாமக்கல், நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும், பி.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கான துவக்க விழா நடந்தது. கல்லுாரி தலைவர் பழனி ஜி பெரியசாமி, துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் கலைமணி வரவேற்றார். தாளாளர் கணபதி, 'கல்வியை மாணவர்கள் புரிந்துகொண்டு படிப்பது அவசியம்,'' என்றார்.முதன்மையர் பெரியசாமி, ''மாணவர்களின் எதிர்காலத்திற்கு படிப்பு மட்டுமின்றி, ஒழுக்கமும் அவசியம்,'' என்றார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லுாரி பொருளாதார துறைத்தலைவர் புவனேஸ்வரி, கல்லுாரி படிப்பின் அவசியம் குறித்து பேசினார். துணை முதல்வர் கோகுல கண்ணன் நன்றியுரை வழங்கினார். பி.ஜி.பி., கல்வி குழுமத்தின் அனைத்து கல்லுாரி முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.