2 லாரியில் சென்ற வெள்ள நிவாரணம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் செயல்பட்டு வரும் சேஷசாயி காகித ஆலை சார்பில், விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்-கப்பட்டது.இதில், அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு, சர்க்கரை, டீ துாள், சாம்பார் பொடி, உப்பு, பிஸ்கட், பேஸ்ட், பிரஸ் உள்ளிட்ட, 16 வகை மளிகை பொருட்கள் அடங்கி உள்ளன. 200 பேருக்கு வழங்கும் வகையில், 2 லாரி மூலம், நேற்று கலெக்டர் அலுவல-கத்தில் இருந்து, மாவட்ட கலெக்டர் உமா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.