மேலும் செய்திகள்
கோவை உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி
31-Jul-2025
ப.வேலுார், ப.வேலுார் பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.ப.வேலுாரில் உள்ள டீக்கடை, பேக்கரிகளில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவுப்படி, ப.வேலுார் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் குழுவினருடன், நேற்று பேக்கரி, டீ கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, பேக்கரி கடையில் வைத்திருந்த முறுக்கு, மிக்சர், சிப்ஸ் போன்ற உணவு பொருட்களை ஆய்வு செய்து, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். சந்தேகத்திற்கு இடமான ஆறு உணவுப்பொருட்கள் மாதிரி எடுத்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பினர். இந்த சோதனையில் ஒரு பேக்கரிக்கு, 5,000 ரூபாய் அபராதமும், ஆறு பேக்கரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.மேலும், விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மீது செயற்கை நிறமிகள் பயன்படுத்த கூடாது எனவும், உணவு குறித்து தரம் பற்றிய புகார்களை, 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் மூலம் புகாரளிக்கலாம் என, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.
31-Jul-2025