உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் விவசாயி பலி கால்பந்து கோச் கைது

விபத்தில் விவசாயி பலி கால்பந்து கோச் கைது

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 75; விவசாயி. இவர், நேற்று காலை, 7:30 மணிக்கு, சேலம்-கோவை புறவழிச்சாலையில், நாச்சிமுத்து தோட்டம் அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார், டூவீலர் மீது மோதியதில் பழனிசாமி துாக்கி வீசப்பட்டார்.இதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், பழனிசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பழனிசாமியின் மகன் பெரியசாமி, 48, அளித்த புகார்படி, கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, பெங்களூரை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ராகேஷ், 43, என்பவரை, குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை