மேலும் செய்திகள்
கண் பாதிப்பு கண்டறியும் இலவச பரிசோதனை முகாம்
31-Aug-2024
வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டிய வலசு பஞ்., பகுதியில், சேலம் தொன்போஸ்கோ அன்பு இல்லம், தேசாய் பவுண்டேசன், எஸ்.பி.எஸ்., டிரஸ்ட், லோட்டஸ் கண் மருத்துவ-மனை மற்றும் எஸ்.பி.சி., மருத்துவமனை இணைந்து, இலவச கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாமை நடத்தின. ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.முகாமில், நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதுதவிர முழு உடல் பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., போன்ற பரிசோதனைகள் நடந்தன. இதில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
31-Aug-2024