உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தடுப்பணையில் முழு கொள்ளளவு நீர் தேக்கம்

தடுப்பணையில் முழு கொள்ளளவு நீர் தேக்கம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில், 10 கி.மீ., துாரத்திற்கு தண்ணீர் தேக்கி வைத்து, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், செக்கானுார், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி தடுப்பணை வழியாக ஓடப்பள்ளி தடுப்பணை நீர் தேக்க பகுதிக்கு வந்து சேரும்.ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போதும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மட்டும் மின் உற்பத்தி தீவிரமாக நடக்கும். மற்ற சமயத்தில் ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில், மின் உற்பத்தி ஏற்ற, இறக்கத்துடன் நடக்கும். இந்த ஓடப்பள்ளி தடுப்பணை நீர் தேக்க பகுதியான ஆவத்திபாளையம் என்ற இடத்தில், தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, ஓடப்பள்ளி தடுப்பணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோடைகாலத்தில் பற்றாக்குறை இல்லாமல் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை